விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு..! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Today Cinema News Vijay Antony starrer Valli Mayil teaser released today evening

விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் “பிச்சைக்காரன் 2” திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்பொழுது “வள்ளி மயில்” என்னும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” படத்தில் இவருக்கு ஜோடியாக பரியா அப்துல்லா நடிக்கிறார். மேலும், பாரதிராஜா, சத்யராஜ், சுனில், தம்பி ராமையா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.

ALSO READ : தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை..! இன்றைய நிலவரம் இதோ…

இப்படத்தை தாய் சரவணன் தயாரிக்க வாஞ்சிநாத முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் நாடக கலையின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. 1980 காலகட்ட கதை என்பதால் அக்காலக்கட்டத்தில் நினைவுக் கூறும் வகையில், அனைத்து பொருட்களையும் வைத்து பிரமாணமாக படம் எடுக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், கொடைக்கானல், பழனி, மதுரை, சிறுமலை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு “வள்ளி மயில்” படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. படக்குழு அறிவித்த இந்த அறிவிப்பால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top