Today Current Affairs 22 November 2021 in Tamil

இன்றைய நடப்பு நிகழ்வுகள் 2021

CURRENT AFFAIRS 2021:

Today Current Affairs 22 November 2021 in Tamil

தமிழக அரசு கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு:

  • கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சுழற்ச்சி முறையில் இல்லாமல் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் என்று தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
  • ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடத்த வேண்டும்.
  • மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடங்களை வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்தி: தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்:

  • மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தகூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், தடுப்பூசி செலுத்த விருப்பப்படாத ஆசிரியர்கள் மற்றவர்களின் நலன் கருதி வீட்டிலேயே இருப்பது தான் சிறந்தது.
  • மாணவர்களின் நலன் கருதியே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

FOR MORE JOB DETAILS:

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க சொல்லி டிசம்பர் 3ஆம் தேதி வரை தொடர் போராட்டம் செய்கிறார் அண்ணாமலை:

  • தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அவர்கள் வாட் வரியை குறைக்க சொல்லி டிசம்பர் 3-ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்
  • மற்ற மாநிலங்களில் தமிழகத்தை விட பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்து உள்ளது.
  • தமிழக அரசு கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு ரூபாய் 100 குறைக்க கோரியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், தமிழக அரசை வலியுறுத்தி இன்று (நவம்பர் 22) முதல் டிசம்பர் 03-ஆம் வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன், ஏன்?

  • மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று சென்னைக்கு திரும்பினார் கமல்ஹாசன். தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
  • தற்போது, சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம்: 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது:

  • சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று (நவம்பர் 22) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார்.
  • 23-ஆம் (நாளை) தேதி: ராமநாதபுரம், மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை மக்களுக்கு ஸ்டாலின் உறுதி:

  • கோவை மாநகரின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
  • கோவையில் நலத்திட்டம் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலின், கோவை விமான நிலையத்தின் விரிவாக்கப்பணி, தடையில்லா குடிநீர், செம்மொழி பூங்கா, பாதாள சாக்கடை திட்டம், சிறைச்சாலையை மத்தியப் பகுதியில் இருந்து வெளியே கொண்டு வருவது என பழ திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிப்பு

  • பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு இன்று (நவம்பர் 22) ‛வீர் சக்ரா விருது’ வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.

ரயில்களில் கட்டணம் குறைப்பு:

  • தெற்கு இரயில்வே நிர்வாகத்தால் இயக்கப்பட்டு வரும் பண்டிகை காலம், விடுமுறை காலம் ரயில்களான 39 ரயில்களில் சாதாரண கட்டணமும், தட்கல் கட்டணமும் பழைய முன்பதிவு கட்டணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
  • மேலும், தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்தால் தமிழ்நாடு, கேரளா பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் 47 ரயில்களின் கட்டணமும் பழைய நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Current Affairs 2021, Current Affairs Today, Monthly Current Affairs, Latest Current Affairs, Weekly Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Tamil


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button