இன்றைய செய்தி என்ன தெரியுமா? வாங்க படிக்கலாம்!

Today Current Affairs 23 November 2021 in Tamil

CURRENT AFFAIRS 2021:

தினமும் நடக்கும் நிகழ்வுகள் (Current Affairs Today, Weekly Current Affairs, Current Affairs 2021, Monthly Current Affairs, Latest Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Tamil) பற்றிய குறுஞ்செய்திகள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

23 நவம்பர் 2021 நடப்பு நிகழ்வுகள்!!!

இன்றைய செய்தி என்ன தெரியுமா வாங்க படிக்கலாம்

தமிழ் வழியில் படிக்க அறிவுரை:

 • பொறியியல் படிப்பை தாய்மொழியான தமிழ் வழியில் கற்பதன் மூலம் மாணவர்கள் நன்றாக படிக்க முடியும். மாணவர்கள் தமிழ் வழியில் படிப்பதால் தொழில் நிபுணர்கள் ஆக முடியும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
 • ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் மாணவர்கள் அனைவரும் தங்கள் தாய் மொழியில் தான் பொறியியல் படிப்பதாக கூறியுள்ளார்.

தமிழகம் – 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

 • விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு:

 • தமிழகத்தில் மேலும் இரு டைடல் பார்க் அமைக்கப்படும் என்று கோயம்புத்தூரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மகாவீர் சக்ரா & வீர் சக்ரா விருது யாருக்கு?

 • கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்த ஹவில்தார் பழனிக்கு (தமிழகத்தை சேர்ந்தவர்) வீர் சக்ரா விருதும், கர்னல் சந்தோஷ்பாபுவுக்கு (தெலுங்கானாவை சேர்ந்தவர்) மகாவீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. அவர்களுக்கான விருதினை உறவினர்களிடம் ஜனாதிபதி வழங்கினார்.

வில்லனாக நடிக்க போகிறார் பிரபல ஹீரோ:

 • ராஜமவுலி இயக்க போகும் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் விக்ரமை அணுகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ராஜமவுலி இயக்கம் இந்த படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.

மாலை நேர தங்கம் நிலவரம்:

 • சென்னையில் மாலை நேர நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.768 குறைந்து ரூ.36,136-க்கும் கிராமுக்கு ரூ.96 குறைந்து ரூ.4,517-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 • 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.39,048-க்கும், கிராம் ரூ.4,881-க்கும் விற்பனையாகிறது.
 • வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.10 குறைந்து கிராம் ரூ.68.80-க்கும், கிலோ வெள்ளி ரூ.68,800-க்கும் விற்க்கபடுகிறது.

BREAKING: நீங்களுமா? ரீசார்ஜ் கட்டணம் விலை உயர்வு…

 • ஏர்டெல் ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை தொடர்ந்து, வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனமும் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
 • ரூ.79 திட்டம் ரூ.99 ஆகவும், டாப் அப் திட்டங்களுக்கான கட்டணம் ரூ.67 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
 • இந்த கட்டண விலை உயர்வு 25 நவம்பர் 2021-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

‛ஹலால்’ உணவு கட்டாயமா? பிசிசிஐ விளக்கம்:

 • இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் வாரியம்) தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.
 • ‘உணவு விஷயத்தில் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை,’ என பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

DAILY LATEST JOBS:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button