மிகவும் முக்கிய அறிவிப்பு! சற்றுமுன் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

Today Education News Very important announcement Public exam schedule released for students just now!

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மாநில வாரிய படத்திடத்தின் கீழ் வரும் 10th, +1, +2, மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டுவிட்டது. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்களும், பெற்றோர்களும் இருந்தனர். எனவே சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ALSO READ : தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கட்டணமில்லாமல் சான்றிதழ் நகல் பெறலாம்!

அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி 15, 2024 அன்று சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதாக சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்து இருக்கிறார். சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 – ந்தேதி தொடங்கி, மார்ச் மாதம் 13 – ந்தேதி வரையிலும் நடக்க உள்ளது.

அதேபோல், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 – ந்தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 2 ஆம் தேதி வரையிலும் நடக்க உள்ளது. தேர்வுக்கான நேரம் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், சில தேர்வுகள் மட்டும் 12.30 வரைக்கும் நடைபெற இருக்கிறது. இவ்வாறாக சி.பி.எஸ்.இ நிர்வாகம் இதுதொடர்பான அறிவிப்பை தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top