படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் ஹாப்பி…

Today Gold Price In Tamil Gradually decreasing gold price peoples are so happy

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் சிறு சேமிப்புகளில் ஒன்றாக தங்கமும் உள்ளது. ஏனென்ன்றால் சிறிது சிறிதாக தங்கத்தை சேர்த்து வைக்கும் பொழுது அவை பிற்காலத்தில் லாபம் தரக்கூடிய சேமிப்பாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பாக ஒரு சவரன் தங்கம் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் நாட்டின் பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை படிப்படியாக உயர தொடங்கியது.

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நாள்தோறும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாத தொடக்கம் முதலே தங்கம் விலையானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் மக்களும் தங்கம் வாங்க முடியாமல் தவித்து வந்தனர்.

ALSO READ : தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில், தங்கம் விலையானது இந்த வார தொடக்கத்திலிருந்தே படிப்படியாக குறைய தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, இன்றும்(டிசம்பர் 12) தங்கம் விலையனாது சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரனதங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 720 க்கும் சவரன் ஒன்றுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45 ஆயிரத்து 760 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போலவே வெள்ளியின் விலையும் கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top