
இன்றைய காலக்கட்டத்தில் விதவிதமான டிசைன்களில் தங்க நகைகளை அணிய வேண்டும் என்ற ஆசை அனைத்து பெண்களுக்குமே உள்ளது. தங்கம் என்பது ஒரு சிலருக்கு ஆசை என்றாலும் இதனை பலரும் எதிர்கால சேமிப்பிற்காகவும் வாங்கி வருகின்றனர். இந்த தங்கத்தின் விலையானது கொரோனா காலக்கட்டத்திற்கு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி தற்பொழுது 45 ஆயிரத்து தாண்டியுள்ளது.
இந்த தங்கத்தின் விலையானது ஒவ்வொரு நாளும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தங்கம் விலையானது கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்பின், கடந்த சில நாட்களுக்கு முன் தங்கத்தின் விலையானது சற்று குறைய தொடங்கியது. இதனால் தங்க வாங்க நினைத்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ALSO READ : அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்த திரிஷா… #KH234 அப்டேட்
இந்நிலையில், சென்னையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 670 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.45 ஆயிரத்து 360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.77 ஆயிரத்து 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.