
முன்னதாக திருமணத்திற்கு பெண் தேடும் மாப்பிள்ளை வீட்டார்கள்தான் பெண் வீட்டார்களிடம் நகை, பைக், கார் என அனைத்தையும் கேட்பார்கள். ஆனால், தற்பொழுது எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பெண் வீட்டார்கள்தான் மாப்பிள்ளை வீட்டார்களிடம் மாப்பிள்ளை லட்சத்தில் சம்பாதிக்க வேண்டும், பைக், கார் வைத்திருக்க வேண்டும், சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர்.
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பெண்களும் ஆடம்பர வாழ்க்கைக்குத்தான் ஆசைப்படுகின்றனர். இதன் காரணமாக நடுத்தர குடும்பத்தில் இருக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் போய்விடுகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் கோடஹள்ளி என்ற கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான இளைஞர்கள் விவசாயம்தான் செய்து வருகின்றனர். இந்த இளைஞர்கள் விவசாயம் செய்வதால் இவர்களுக்கு பெண் கொடுக்க பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதால் இவர்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர்.
ALSO READ : தமிழக அரசின் வருவாய் துறையில வேலை! 8th படிச்சவங்களே… இந்த ஜான்ஸ் உங்களுக்குத்தான்…!
இதனை கருத்தில் கொண்டு கோடஹள்ளி கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் 160 கி.மீ தொலைவில் உள்ள மாதேஸ்வரம் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தங்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்க வேண்டும் என்றும் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த பாதயாத்திரையை மேற்கொண்டாதவும் தெரிவித்துள்ளனர். இதேபோல், சில மாதங்களுக்கு முன்பு மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் திருமணம் செய்ய பெண் கிடைக்க வேண்டி மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரை சென்றது குறிப்படத்தக்கது.