இந்திய வரலாற்றில் இன்று முக்கிய நாள்!! ஒருபக்கம் பார்த்தா சந்திராயன் 3 தரையிறக்கம்… மறுபக்கம் பார்த்தா உலக கோப்பை செஸ் போட்டி…

இந்தியாவின் மிக முக்கிய நாளாக இன்று(ஆகஸ்ட் 23) இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏனென்றால், இந்தியாவை பெருமைப்படுத்தும் விதமாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் இன்று நடைபெற உள்ளது. அவற்றில் ஒன்று, சந்திராயன் 3 விண்கலம் இன்று நிலவில் தரையிறங்க உள்ளது. மற்றொன்று உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் இரண்டாம் சுற்று இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் பிரக்ஞானந்தாவும் அமேரிக்கா சார்பில் பேபியானோ கருணாவும் மோத உள்ளனர்.

Today is an important day in Indian history On one side Chandrayaan 3 landing On the other side World Cup Chess Match see here

இந்நிலையில், சதுரங்க உலகக் கோப்பை தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார். இதையடுத்து, நேற்று நடைபெற்ற இறுதி போட்டியின் முதல் சுற்றானது சமனில் முடிந்தது. அதன்பிறகு, இன்று(ஆகஸ்ட் 23) இரண்டாம் சுற்று நடைபெற உள்ளது.

Also Read : என்னது 1 மணி நேரம் வேலை செஞ்சா ரூ.33 ஆயிரம் சம்பளம் தராங்களா..? உலகையே திரும்பி பார்க்க வைத்த அந்த நிறுவனம்..!

உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதி போட்டியின் இரண்டாம் சுற்றின் முடிவை இந்தியா எதிர்பார்த்து காத்திருக்கும் அதே வேளையில் சந்திராயன் 3 விண்கலம் இன்று மாலை 5 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் தருணத்தையும் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர். இன்று ஒரே நாளில் இரு வெற்றிகளையும் இந்தியா படைக்க வேண்டும் என்று இணையத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.