இன்று ஜெயலலிதா நினைவு தினம் – தமிழிசை சவுந்தரராஜன் நினைவஞ்சலி

Today is former Chief Minister Jayalalitha's memorial day-Jayalalithaa Memorial Day

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். இவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் கிட்டத்தட்ட 2 மாதங்கள் மருத்துவமனையில்தான் இருந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படாததால் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார்.

இந்நிலையில், இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சென்று அதிமுக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதா நினைவுதினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பதிவில், பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை…துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here