மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்..!

Today is the last day to link Aadhaar number with electricity connection..!

மின்வாரியம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் அவர்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்நிலையில் நவம்பரில் தொடங்கிய இந்த பணிகள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

தற்போது வரை பலரும் இணைக்காததால் ஜனவரி 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையும் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் மின் வாரியம் அலுவலகத்தில் நேரில் சென்றோ இணையத்தின் வழியாகவும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்தனர். மேலும் இந்த நிலையில் இனியும் கால அவகாசம் வழங்கப்படா மாட்டது என்றும் மின் இணைப்பை ஆதார் எண்ணை இணைக்காதோர் இன்றைய நாளுக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மின்வாரிய இணையதளத்தில் அவர்களது மின் இணைப்பு எண் மற்றும் கைப்பேசி எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நுகர்வோர்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.


RECENT POSTSIN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here