இன்று கி. வீரமணியின் 90-வது பிறந்தநாள் – வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Today K. Veeramani's 90th birthday - Chief Minister M.K. Stalin-K Veeramani 90th Birthday

திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் இன்று தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் இவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில், பத்து வயது முதல் 90 வயது வரை சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, பகுத்தறிவு உணர்வினை ஊட்டி வரும் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அகவை 90 என்பதில் அகம் மகிழ்கிறேன்.

திராவிட மாடல் அரசின் சமூகநீதிக் கொள்கை சார்ந்த அனைத்துத் திட்டங்களுக்கும், சட்டப் போராட்டங்களுக்கும் உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் இருந்த வீரமணி அவர்கள் நூறாண்டு கடந்தும் நலமோடு வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன் என்று வாழ்த்தியுள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here