
தமிழ் சினிமாவில் பாஸ் என்கிற பாஸ்கரன், சிறுத்தை, தளபதி போன்ற பல்வேறு படங்களில் காமெடி நடிகனாக சந்தானம் நடித்துள்ளார். இவரின் காமடி பல்வேறு தரப்பினரை ஈர்த்ததால் இவருகென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் காமெடியனாக நடித்ததை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு படங்களில் ஹூரோவகவும் நடித்து வருகிறார். அந்த வகையில், சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான “டிடி ரிட்டன்ஸ்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் பெரிய அளவில் ஹிட் அடித்தது.
இந்நிலையில், சந்தானம் அடுத்ததாக “80ஸ் பில்டப்” என்ற படத்தில் நடித்து வருகிறார். “ஜாக்பாட்”, “கோஸ்டி” போன்ற பல்வேறு படங்களை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குனர் கல்யான் என்பவர்தான் சந்தானத்தின் “80ஸ் பில்டப்” என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சந்தானத்துடன் ராதிகா பிரீத்தி, கே எஸ் ரவிக்குமார், ஆனந்த்ராஜ் மற்றும் மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ALSO READ : மாசம் ரூ.30000 to ரூ.50000 சம்பளம் | சென்னை SETS நிறுவனத்தில வேலைவாய்ப்பு!
சந்தானத்தின் “80ஸ் பில்டப்” படத்தினை ஸ்டூடியோ கிரீன் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் 80ஸ்களில் நடந்த கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதால் படம் எப்படி இருக்கும்? என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த படத்தின் படபிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிலிருந்தே இப்படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், படக்குழு தற்பொழுது “80ஸ் பில்டப்” படம் ரிலீஸ் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளங்களில் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.