
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்தது. கோடை காலம் முடிந்த பின்பும் வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வந்தனர். மழை எப்பொழுது பெய்யும் வெயிலின் தாக்கம் எப்பொழுது குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தற்பொழுது வடகிழக்கு தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
ALSO REAAD : தீபாவளி பண்டிகையொட்டி சிவகாசியில் ரூ.6,000 கோடிக்கு பட்டாசு விற்பனை..!
மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், குமரி, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.