
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான “வேலையில்லா பட்டதாரி” திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அதன்பிறகு இவர் நடிக்கும் அனைத்து படங்களும் மெகா ஹிட் அடித்து வருகிறது. நடிகர் தனுஷ் அவர்களுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யா அவர்களுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ALSO READ : வாட்ஸ் அப்பில் வெளியான புதிய அப்டேட்..! இனி Privacy பத்தி கவலையே கிடையாது!!
இந்நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அவர்களின் முதல் மகனான யாத்ராவின்(வயது 17) புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் யாத்ரா அவர்கள் போயஸ் கார்டன் பகுதியில் ஆர் 15 பைக் ஒட்டி செல்வது போன்றும் அதில் ஹெல்மெட் அணியாமல் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வரும் இந்த நிலையில், போக்குவரத்து போலீசார் இதுகுறித்து தனுஷின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற யாத்ராவுக்கு போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனம் ஒட்டியதற்காக ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
