தமிழக அரசின் ரூ.6000 நிவாரண தொகையுடன் மத்திய அரசும் நிவாரணம் கொடுக்குதா..? சற்றுமுன் கிடைத்த புதிய தகவல்!!

Today News Along with the relief amount of Rs.6000 from the Tamil Nadu government will the central government also give relief

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிவாரணத் தொகை வழகுவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், தமிழக அரசு வழங்கும் நிவாரண தொகையானது பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள நியாய விலை கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், புயல் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 4 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலும் சேமடைந்துள்ள குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 வது பிறந்தநாள்..! சமூக வலைதளங்களில் பட்டையை கிளப்பும் ரசிகர்கள்!!

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தற்பொழுது மத்திய அரசும் தனியாக நிவராணம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் மிக்ஜம் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரதமர் மோடியிடம் இது தொடர்பாக ஒரு அறிக்கையை கொடுத்துள்ளார். மேலும், புயல் பாதிப்புகள் குறித்தும், மத்திய அரிசின் உதவி அவசியம் தேவைப்படுகிறது என்றும் பிரதமரிடம் எடுத்துரைத்தார். இந்நிலையில், மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top