Google Pay அதிகமா யூஸ் பண்றீங்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க… நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!!

Today News Do you use Google Pay a lot Dont just make this mistake Companys Important Announcement

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். இப்போதெல்லாம் யார் கையிலயும் காசு வைத்திருப்பதை பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை கிராமங்களிலும் கூட வளர்ந்திருக்கிறது. இந்த டிஜிட்டல் பணப்ரிவர்த்தனை மூலம் பேங்க்குக்கு போகாமல் இருக்கும் இடத்தில் இருந்தே யாருக்கு வேண்டுமானாலும் UPI வசதி மூலம் பரிவர்த்தனையை செய்து கொள்ள முடியும். எந்த அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்து வருகிறதோ அதே அளவிற்கு மோசடிகளும் அதிகரித்து வருகிறது.

ALSO READ : நடிகை வரலட்சுமி நடித்த “ஹனுமான்” படம் பொங்கலுக்கு ரிலீஸ்..!

பொதுவாக பெரும்பாலான மக்கள் ஆன்லைன் UPI பரிவர்த்தனையை மேற்கொள்ள Google Pay செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதிலும் பல்வேறு மோசடிகள் ஏற்படுவதாகவும் அந்த மோசடிகளில் இருந்து தப்பிக்க கவனமாக இருக்க வேண்டிய விஷியங்கள் குறித்தும் கூகுல் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயனாளர்கள் ஸ்கிரீன் ஷேரிங் ஆப்ஸைனை பயன்படுத்தி கொண்டு ஆன்லைன் பணபரிவர்த்த்னையை மேற்கொள்ள கூடாது. ஸ்கிரீன் ஷேரிங் ஆப்ஸைனை பயன்படுத்திக்கொண்டு பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது உங்களின் தனிப்பட்ட OTP மற்றவர்களுக்கும் தெரிய வாய்ப்புண்டு. இதன் மூலம் மற்றவர்களும் உங்கள் OTP யை பயன்படுத்தி பணபரிவர்த்தனையை தவறான முறையில் செய்ய முடியும்.

எனவே, Google Pay பயனர்கள் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது எந்தவொரு திரைப் பகிர்வையும் பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், பயனர்களின் பாதுகாப்பிற்காக நிறுவனம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் பயனர்கள் கவனமாக இருப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top