
தங்கம் விலையானது ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படியாக கொண்டு தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையானது கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு தொடர்ந்து அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. இதனால் தங்கம் வாங்க நினைக்கும் ஏழை, எளிய மற்றும் பாமர மக்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டது. இதனால் தீபாவளி போனஸ் வாங்கிய பலரும் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டி வந்தனர். தீபாவளி பண்டிகையின்போது தங்கம் விலை குறைந்து காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ALSO READ : மோகன்லால் நடிக்கும் “லூசிபர் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!
இதையடுத்து, கடந்த சில தினங்களாகவே குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.5 ஆயிரத்து 615 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.44 ஆயிரத்து 920 க்கு விற்பனை செய்யபடுகிறது. தங்கத்தின் விலையை போல வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.76 க்கும் கிலோ ஒன்று ரூ.76,000 க்கும் விற்பனை செய்யபப்டுகிறது.