
நாடு முழுவதும் பொதுவிநியோகம் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் தங்களின் குடும்ப அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தி வந்தது. புதுப்பிக்கப்படாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் மட்டும் சுமார் 96 லட்சத்து 6 ஆயிரத்து 259 முன்னுரிமை குடும்ப அட்டைகளும், 18 லட்சத்து 65 ஆயிரத்து 460 அந்தியோதயா அட்டைகளும் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
ALSO READ : தமிழகத்தில் நாளை ஓட்டுனர், நடத்துனர் பணிக்கான தேர்வு..! குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகளை இயக்க உத்தரவு!!
இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்புப்படி நவம்பர் மாத இறுதிக்குள் 70 சதவீதம் குடும்ப அட்டை புதுப்பித்திருக்க வேண்டும் என்றும் டிசம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீத குடும்ப அட்டையும் புதுப்பித்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் விரைந்து செயல்பட்டு குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை புதுப்பிக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.