
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ந்த நிலை உருவாகியுள்ளதால் மக்களை மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழகத்தில் தற்பொழுது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
ALSO READ : உத்தரகாண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொலிலாளர்களின் வீடியோ வெளியீடு..!
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனைதொடர்ந்து, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு காரணமாக நாளை(நவம்பர் 22) மற்றும் நாளை மறுநாள்(நவம்பர் 23) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் அங்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.