
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் TN TRB தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் தற்பொழுது வரையிலும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படாமல் இருப்பதால் அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் பள்ளிகல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளிகளில் தேவைக்கு அதிகமாக இருக்கும் முதுகலை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
ALSO READ : தமிழகத்தில் அனைத்து வகை வாகங்களையும் வாடகை வாகனங்களாக பயன்படுத்தலாம் – போக்குவரத்துறையின் அதிரடி அறிவிப்பு
ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய முதலில், பள்ளி மாணவர்களை கணக்கீடு செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஒரு பள்ளியில் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் தேவையுள்ள வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். இந்த ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கான கவுன்சிலிங் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கபட்டுள்ளது.