மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! உயர்த்தப்பட்ட அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டணம் நிறுத்திவைப்பு..!

Today News In Live Withdrawal of raised Anna University exam fees

தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் சுமார் 400 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பொறியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்பு என மொத்தம் 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஒரு செமஸ்டர் தேர்வும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் ஒரு செமஸ்டர் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.

ALSO READ : இணையத்தில் வைரலான நடிகர் தனுஷ் மகனின் புகைப்படம்..! அபராதம் விதித்த போக்குவரத்துறை போலீசார்!!

கல்லூரி மாணவர்கள் இந்த செமஸ்டர் தேர்வுகளை எழுத தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 என்ற கணக்கில் செலுத்தி வந்தனர். இந்நிலையில், அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டணமானது 50% உயர்த்தப்பட்டு அதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தின் அடிப்படையில், தாள் ஒன்றுக்கு ரூ.225 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இளநிலை பட்டப்படிப்புக்கான செய்முறை கட்டணம் ரூ.300 லிருந்து ரூ.450 ஆகவும், முதுநிலை படிப்புகளுக்கான பருவத் தேர்வு, செயல்முறை தேர்வு மற்றும் ப்ராஜெக்ட் கட்டணம் ரூ.450 லிருந்து ரூ.650 ஆகவும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல், பட்டப்படிப்பு சான்றிதழ்கள் ஆகியவை டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்ய ரூ.1,500 என்றும் உயத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், நடப்பு செமஸ்டருக்கான தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது என்றும் மாணவர்கள் அனைவரும் பழைய தேர்வு கட்டண முறைப்படியே தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்த கல்வியாண்டில் தேர்வு கட்டணம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுவரை மாணவர்கள் கூடுதலாக தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அதை மீண்டும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்