
இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி 13 வது உலக கோப்பை போட்டித் தொடர் தொடங்கப்பட்டு நவம்பர் 19 (இன்றுடன்) முடிவடைய உள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா என மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் அதிக வெற்றி புள்ளியை எடுத்து இந்திய அணி முதன்முதலில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
அரையிறுதி போட்டியில் இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய உள்ளிட்ட மூன்று அணிகள் விளையாடியது. இதில், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையேயான இறுதி சுற்று போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், எந்த அணி வெற்றி மகுடத்தை சூடப்போகும் என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ALSO READ : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு தொடர் சிகிச்சை..!
இதையடுத்து, உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இன்று விளையாட இருக்கும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், உலக கோப்பையை வெல்ல எனது வாழ்த்துக்கள் இந்தியன் டீம், உங்களை உற்சாகப்படுத்த 140 கோடி இந்தியர்கள் உள்ளனர். நேர்மையாகவும் விளையாடி வெற்றி பெறுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.