மிக்ஜம் புயல் : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கொட்டப்போகும் மழை!

Today News In Tami Thunderstorm likely to occur in 13 districts of Tamil Nadu today due to Cyclone Mikjam

தமிழகத்தில் கடந்த மாதம் வரை வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தினால், சென்னை போன்ற கடலோர பகுதிகளில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அதிக கனமழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக வானிலை மையம் தற்போழுது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுபெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு “மிக்ஜம்” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

ALSO READ : மிக்ஜம் புயல் எதிரொலி : TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு!

இந்நிலையில், மிக்ஜம் புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை,
கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் தருமபுரி ஆகிய 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top