தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கொட்டபோகும் மழை..! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!!

Today News In Tamil 10 districts of Tamil Nadu will experience thundery rain in the next 3 hours

தமிழ்நாட்டில் மிக்ஜம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை பெய்தது. இதனால் சென்னை முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் நீர் மழைநீர் வற்றினால், பல்வேறு பகுதிகளில் இன்றளவிலும் மழைநீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்ட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ : MEFTAL மாத்திரைகளை உட்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படும் – இந்திய மருந்தியல் ஆணையம்

இதனையடுத்து, அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top