
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அந்த கல்வியாண்டுக்கான இறுதி தேர்வு நடைபெறுவது வழக்கம். அதேபோல், 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு பொதுத் தேர்வும் நடைபெறும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை நவம்பர் மாதங்களில் பள்ளிக்கல்வித்துறை வெளியிடும். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில் பயிலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை எப்பொழுது வெளியிடப்படும் என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 2023-24 ஆம் ஆண்டு பயிலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டார். அதன்படி, 10 ஆம் வகுப்பு போதுத்தேர்வானது அடுத்த ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
ALSO READ : மக்களே உஷார்..! பஜாஜ் நிறுவனம் கடன் வழங்க தடை! ஆர்பிஐ விதித்த அதிரடி உத்தரவு!!
நடப்பு ஆண்டு பயிலும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் :
- 10 ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 29 ஆம் தேதி முடிவடைகிறது.
- 11 ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முடிவடைகிறது.
- 12 ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 17 ஆம் தேதி முடிவடைகிறது.
பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் :
- 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு மே 10 ஆம் தேதி வெளியிடப்படும்.
- 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியிடப்படும்.
- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிடப்படும்.