UPI மூலம் பணம் அனுப்ப இனி 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும்..! சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

Today News In Tamil 4 more hours to send money through UPI Payment

இன்றைய காலக்கட்டத்தில் மக்களிடையே டிஜிட்டல் பணவரித்தனை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதிலும் குறிப்பாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளை பயன்படுத்தி பணபரிவர்த்தனை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக பெரிய பெரிய துணிக்கடைகள் மற்றும் மால்களில் மட்டுமே UPI சேவை இருந்து வந்தது. ஆனால், தற்பொழுது டீ கடைகள் முதல் சிறிய பெட்டி கடைகள் வரை அனைத்து கடைகளிலும் UPI பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாட்டில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறதோ அதே அளவிற்கு ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் மோசடிகளை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஒருவருக்கு ஆன்லைன் பணபரிவத்தனை செய்யும் போது குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு தான் பணத்தை அனுப்ப முடியும். அதாவது, ஒருவருடைய கணக்கிற்கு 1000 ரூபாய் அனுப்ப நினைத்தால் முதலில் 2000 ரூபாய்தான் அனுப்ப முடியும். அதன்பிறகு 4 மணி நேரம் கழித்தே மீதி இருக்கும் பணத்தை அனுப்ப முடியும்.

ALSO READ : இனி வாட்ஸ் அப்பில் அனுப்பும் புகைப்படங்கள், வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்..! வெளியான சூப்பர் அப்டேட்…

மேலும், ஒரு நபருக்கு 2000 ரூபாய்க்கு மேல் முதல் முறையாக அனுப்பிவிட முடியாது. இந்த நடைமுறை தனிப்பட கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் பிஸ்னஸ் கணக்குகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது இந்த நடைமுறை கடைபிடிக்கப்படாது என்றும் இதன் மூலம் ஆன்லைன் மோசடிகளை தடுக்க முடியும் என்பதால் அரசு இந்த நடவடிக்கையை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top