ஐஸ்லாந்தில் 14 மணி நேரத்தில் ஏற்பட்ட 800 நிலநடுக்கம்..! அச்சத்தில் மக்கள்!!

Today news in tamil 800 earthquakes in Iceland in 14 hours

கடந்த சில ஆண்டுகளாகவே உலகின் பல்வேறு இடங்களில் அவ்வபோது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலநடுக்கம் ஒரு சில பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுவதால் இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலரும் இறந்து விடுகின்றனர்.

ALSO REEAD : தீபாவளி பண்டிகை : மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடி உயர்வு! ஒரு கிலோ ரூ.1,500 க்கு விற்பனை…

அந்த வகையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்தில் நேற்று தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுத்தை கணக்கிடுகையில் 14 மணி நேரத்தில் மொத்தம் 800 நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது தென்மேற்கு பகுதியில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வடக்கு ஹரிண்டவிக் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தான் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் குளுகியதால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியில் ஓடி வந்தனர். ஐஸ்லாந்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம் காரணமாக அங்கு தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐஸ்லாந்து பகுதி முழுவதும் பரப்பரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்