அதிகாலையில் திடீரென உடைந்த ஏரி… அலறி அடித்து வெளியேறிய மக்கள்..!

Today News In Tamil A lake near Kanchipuram suddenly broke in the early hours of this morning

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக கனமழை கொட்ட்டித் தீரத்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுகுக்காக வெளியே வர முடியாத சூழலும் ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் மூன்று நாட்களுக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மிகஜ்ம் புயலால் பல்வேறு ஏரிகளில் தண்ணீரின் அளவு அதிகரிக்க தொடங்கியது. அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் நடுவரப்பட்டி பகுதியில் உள்ள ஏரி முழுவதுமாக நிரம்பியது. இந்த ஏரியில் இருந்து தான் அந்த பகுதியில் குடிநீர் வழங்கப்படுவது மட்டுமல்லாமல், இதன் மூலம் 500 ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெற்று வருகிறது.

ALSO READ : சென்னையில் மிக்ஜம் புயலால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இன்று முதல் சிறப்பு முகாம்..!

இந்நிலையில், மழை காரணமாக முழுவதும் நிரம்பி இருந்த ஏரி இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் திடீரென உடைந்தது. இதனால் அந்த ஏரிக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. மேலும், ஏரி உடைந்ததால் குடியிருப்பு பகுதிக்கும் தண்ணீர் புகுந்ததால் உறங்கி கொண்டிருந்த மக்கள் அனைவரும் அலறி அடித்து கொண்டு வெளியேறினர். இதுதொடர்பாக சோமங்கலம் போலீசார் ஏரி தானாக உடைந்ததா? அல்லது மர்ம நபர்களால உடைக்கப்பட்டதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top