தமிழகத்தில் முட்டை விலை திடீர் உயர்வு..! சற்றுமுன் கிடைத்த புதிய தகவல்!!

Today News In Tamil A sudden increase in the price of eggs in Tamil Nadu

நம் உடலுக்கு அதிக சத்துகளை தரும் உணவுகளில் முக்கியமானதாக முட்டை உள்ளது. இதனால்தான் அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. முட்டையானது நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டையானது தமிழகத்தில் உள்ள மாற்ற மாவட்டங்களுக்கு அனுப்படுவது மட்டுமல்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுவதால் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தி செயப்படும் முட்டையின் விலையானது தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மூலமாகத்தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ALSO READ : சென்னையை தொடர்ந்து அமெரிக்காவையும் புரட்டி போட்ட புயல்..! இதுவரை 7 பேர் உயிரிழப்பு!!

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் இன்று(டிசம்பர் 11) முட்டையின் விலை சற்று அதிகரித்துள்ளது. நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலையானது ரூ.5.30 ஆகவும், முட்டை விற்பனை விலையானது ரூ.5.80 ஆகவும் நிர்ணயம் செய்யப்படுள்ளது. மேலும், கறிக்கோழி ஒரு கிலோ ரூ.76 க்கு விற்பனை செய்யப்படும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top