ஆதார் அட்டை இலவச அப்டேட் : டிசம்பர் 14 கடைசி நாள்

Today News In Tamil Aadhaar card free update December 14 last day

ஆதார் கார்டு என்பது ஒருவருடைய முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. இந்த ஆதார் கார்டை பயன்படுத்திதான் அரசின் அனைத்து வகையான சேவைகளையும் பெற முடியும். எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு ஆதார் கார்டு முக்கியமாக தேவைப்படுகிறது. வாகனம் வாங்குவது, நிலம் வாங்குவது, நிலம் விற்பது, மின் இணைப்பு வாங்குவது, விவசாய மானியம் வாங்குவது, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்து வகையான வேலைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்டேட் செய்யாமல் இருக்கும் இருக்கும் பயனாளிகள் வருகிற டிசம்பர் 14 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் இலவசமாக புதுபித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது. எதிர்காலத்தில் ஆதார் அட்டையை பயன்படுத்திதான் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் ஆதார் கார்டை புதுபிப்பது அவசியம் என்றும் அதற்கான வழிமுறைகளையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) வெளியிட்டுள்ளது.

ALSO READ : உத்தரகாண்ட் சுரங்க விபத்து : 41 தொழிலாளர்களும் நாளை அதிகாலைக்குள் மீட்பு

ஆதார் கார்டை புதுபிப்பதற்கான வழிமுறைகள்:

  • ஆதார் அட்டையை புதுபிக்க முதலில், UIDAI என்ற இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்.
  • அந்த பக்கத்தில் வேண்டிய மொழியை தேர்வு செய்ய வேண்டும். அந்த பக்கத்தில் அப்டேட் ஆதார் (Update Aadhaar), கெட் ஆதார் (Get Aadhaar) மற்றும் ஆதார் சர்வீசஸ் (Aadhaar Services) என்ற option இருக்கும்.
  • அவற்றில், அப்டேட் ஆதார் என்பதை தேர்வு செய்தபின், Update Your Aadhaar என்ற பக்கம் தோன்றும்.
  • அதில், Address மற்றும் ஆதார் போன்ற விவரங்களை உள்ளிட்டபின், கேப்ட்சா வெரிபிகேஷன் கேட்கும்.
  • அதனை கிளிக் செய்தால், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். தேவைப்பட்டால் இந்த முறையை பயன்படுத்தி உங்களது முகவரியும் மாற்றிக்கொள்ளலாம்.
  • முகவரியை மாற்ற அதில் கேட்கப்படும் ஆவணங்களை அப்லோட் செய்ய வேண்டும். அதன்பிறகு, 15 நாட்களுக்கு முகவரி மாற்றப்படும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top