
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நகைச்சுவை தொடரில் சிறு சிறு வேடங்களில் நடத்தவர்தான் நடிகர் யோகிபாபு. இவரின் தனித்துவமான நகைச்சுவை இவரை வெள்ளித்திரையில் நடிக்க வைத்தது. தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி நகைச்சவை நடிகராக வளம் வருகிறார் நடிகர் யோகிபாபு. இவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து இதுவரை மூன்று முறை சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற விருதினை பெற்றுள்ளார்.
கோலமாவு கோகிலா, பரியேரும் பெருமாள், லவ் டுடே போன்ற பல்வேறு படங்களில் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தேயே உருவாக்கியுள்ளார் நடிகர் யோகிபாபு. இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் கடவுள் மீதும் அதிக நம்பிக்கை கொண்டு இருப்பதால் அடிக்கடி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.
ALSO READ : தமிழகத்தில் பத்திர பதிவு கட்டண உயர்வால் வருவாய் இழப்பு..! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!!
அந்த வகையில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு இன்று(செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சுவாமியை தரிசிக்க சென்றுள்ளார். திருவண்ணமலையில் ராஜகோபுரம் அருகில் இருக்கும் முருகரை மனம் உருகி வழிபட்டார். அதன்பின், அண்ணா மலையார் உண்ணாமலை அம்மனை வழிபட்டபின், பைரவர் சன்னதிக்கு சென்று அங்குள்ள பைரவரை வழிபட்டார். சாமியை தரிசனம் செய்த பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் யோகி பாபுடன் கோவிலில் இருந்த பக்தர்கள் செல்பி எடுத்து கொண்டனர்.