ஒரே நாளில் குற்றால அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்..!

Today News In Tamil Ayyappa devotees gathered at Koorala waterfall in one day

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக அருவிகளில் நீர் ஆர்பரித்து கொட்டி வருவதால் இதனை காண சுற்றுலா பயணிகளும் படையெடுக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவி தான் சுற்றுலா தளங்களில் மிகவும் பிரபலமானது. மழையின் காரணமாக ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வருகிறது.

ALSO READ : ரேஷன் கார்டுகளை புதுபிக்காவிட்டால் ரேஷன் பொருட்கள் கிடையாது – மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை

இந்நிலையில், இந்த குற்றால அருவிகளில் நீராட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு பெரும்பாலானோர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். அதன்படி, ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் குற்றால அருவியில் நீராடி செல்வது வழக்கம்.

அந்த வகையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் குற்றால அருவியில் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கையும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குற்றால அருவியை காண வந்தவர்கள் அங்கு ஆர்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். குற்றால அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிட்டுள்ளதால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்