
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து வந்த நடிகர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திரைத்துறையை விட்டு விலகி அரசியலில் களம் இறங்கினர். விஜயகாந்த் தற்பொழுது தே.மு.தி.க கட்சியின் தலைவராக உள்ளார். இவருக்கு கடந்த ஒரு சில வருடங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமான காரனத்தினால் அவரை அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். அதன்பின், அவரின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட காரணத்தால் அவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
ALSO READ : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்
இதனை தொடர்ந்து, நேற்று(சனிகிழமை) விஜயகாந்த் அவர்களுக்கு திடீரென்று இருமல் மற்றும் சளி அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மாலை சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்று மாலை அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் இன்று இரவு வரை மருத்துவனையில் சிகிச்சை பெற்று நாளை வீடு திருப்புவார் என்று தே.மு.தி.க கட்சியினர் தெரிவித்துள்ளனர்.