தமிழ்நாட்டில் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! அச்சத்தில் பொதுமக்கள்!!

Today News In Tamil Corona infection is increasing day by day in Tamilnadu

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள யுகான் நகரில் கொரோனா என்ற வைரஸ் முதன்முறையாக கண்டறியப்பட்டது. அதன்பின், இந்த வைரஸானது படிப்படியாக பரவ தொடங்கி உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சகணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

அதன்பிறகு, கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதனை அனைத்து மக்களுக்கும் செலுத்தப்பட்டது. பின்னர், படிப்படியாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைய தொடங்கி கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், தற்பொழுது தமிழகத்தில் கொரொனோ தொற்று பரவல் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ : நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை : திண்டுக்கல் பள்ளியில் மாணவர்களுடன் நடனமாடிய கிறிஸ்துமஸ் தாத்தா!

இதுதொடர்பாக மக்கள் நலவாழ்வுத்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில், நேற்று தமிழகம் முழுவதும் சுமார் 317 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 5 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 4 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 2 பேருக்கும், காஞ்சீபுரம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top