மக்களே உஷாரா இருங்க… தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்..!

Today News In Tamil Corona virus is increasing day by day in Tamil Nadu

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள யுகான் என்ற நகரில் “கொரோனா” என்ற கொடிய வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸானது கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகளில் பரவ தொடங்கியது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். கொரோனா வைரஸானது தீவிரமாக பரவ தொடங்கியதால் ஊரடங்கு பிரபிக்கப்பட்டு மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது.

அதன்பின், கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிறகு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில், தற்பொழுது தமிழகத்தில் கொரோனா பரவல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

ALSO READ : அரையாண்டுத் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு – மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு

அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று 528 பேருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சென்னையில் 14 பேருக்கும், திருவாரூரில் 3 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேருக்கும், கோவை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று ஒரு நாளில் மட்டும் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top