மீண்டும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்..! அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்!!

Today News In Tamil Corona virus is spreading fast again People are So Suffering

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவியது. இதனால் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்த கொரோனா வைரஸானது நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இதில், உலகம் முழுவதும் லட்சகணக்கான மக்கள் உயிரிழந்தது மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸானது தமிழகத்தில் மூன்று அலைகளை தாண்டி கடந்த சில ஆண்டுகளாகத்தான் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பியதால் மக்களும் நிம்மதியாக உள்ளனர். இதனையடுத்து, தற்பொழுது மீண்டும் கொரோனா பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான இடங்களில் கொரோனா அதிக அளவில் பரவ தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வார அளவில் மட்டும் சுமார் 32 ஆயியார்த்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ : மிக்ஜம் புயல் வெள்ளத்தால் சேதமடைந்த கார், பைக்கை என்ன செய்ய வேண்டும்..? அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன அதிரடி பதில்!!

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்து நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை பின்பற்றும்படியும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் தெரிவித்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு வாரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top