மிகஜ்ம் புயல் பாதிப்பு : சென்னையில் இன்று ஆவின் பால் இலவசம்!

Today News in Tamil Due to rains Aavin milk will be free in various parts of Chennai today

சென்னையில் மிக்ஜம் போல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் சென்னையை வெள்ளக்காடாக காட்சியளித்தது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் அல்லாடி வருகின்றனர். தொடர்ந்து பெய்து வந்த கனமழை, நேற்று காலைதான் சற்று ஓய்ந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வற்ற தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக அரசின் சார்பில் பல்வேறு உதவிகளும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மழையால் பாதிக்கபட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்த மக்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து அங்கு தங்கி இருப்பவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகளை தமிழக அரசு பூர்த்தி செய்து வருகிறது.

ALSO READ : தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்க வாய்ப்பு..! சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

இதனையடுத்து, மிக்ஜம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று(டிசம்பர் 6) ஆவின் பால் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஏற்கனவே அறிவித்திருந்தார். இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ” சென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான மக்கள் தேவைக்கும் அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்கின்றனர். சென்னையில் மழைநீர் வடிந்து வருவதால் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. எனவே வாடிக்கையாளர்கள் ஆவின் பால் பாக்கெட்டுகளை இருப்பு வைக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top