சென்னையில் மின்விநியோகம் எப்பொழுது வழங்கப்படும்..? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Today News In Tamil Electricity supply will be gradually provided in Chennai by this evening

மிக்ஜம் புயல் கரையை கடக்கும் சமயத்தில் சென்னையை ஒரு புரட்டு புரட்டி போட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். என்னென்றால், அந்த அளவிற்கு சென்னையில் நேற்று காலை முதலே சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு முக்கிய சாலைகள், குடியுருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஒரு சில பகுதிகளில் மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளதால் போக்குவரத்து சேவை, ரயில் சேவை, விமான சேவை என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கையும் பாதித்துள்ளது.

தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின்சார சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் பலரும் சிரமப்பட்டு வந்தனர். குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்த்தால் மக்கள் பலரும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

ALSO READ : Egg Price : நாமக்கலில் முட்டை விலை திடீர் உயர்வு!

இந்நிலையில், மிக்ஜம் புயல் தற்பொழுது சென்னையில் இருந்து 210 கி.மீ தொலைவில் இருப்பதால் சென்னையில் மழை ஓய்ந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிந்து வருவதால் சென்னையில் மின்விநியோகம் படிப்படியாக வழங்கப்படும் என்று மின்வாரிய அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், இன்று(செவ்வாய்க்கிழமை) மாலைக்குள் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top