தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Today News In Tamil Employment for 4 thousand new people in Tamil Nadu announcedby Chief Minister M.K.Stalin

தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் மூலமாக அமைக்கப்படும் ஒவ்வொரு தொழிற்சாலையும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பயனடைந்தும் வருகின்றனர். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஜேஆர் ஒன் காலணி உற்பத்தி தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

ALSO READ : சுரங்க விபத்தில் சிக்கி தவித்த 41 தொழிலாளார்கள் மீட்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

இந்த நிகழ்ச்சிக்கு பின் பேசிய தமிழக முதல்வர், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் ஜேஆர் ஒன் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினேன். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தொழிற்சாலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது. 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தமிழகம் பொருளாதார ரீதியில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்றும் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த காலணி தொழிற்சாலை மூலம் தமிழகத்தில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த தொழிற்சாலை அமைக்கும் பணியின் முதற்கட்டமாக சுமார் 4000 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாகவும் 2028 ஆம் ஆண்டுக்குள் 29 ஆயிரத்து 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top