
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளும் தற்பொழுது தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து உயர்க்கல்வி தொடர அவர்களுக்கு கல்வி உதவித் தொகைகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.
அந்த வரிசையில், அரசு பள்ளிகளில் பயின்று வரும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினியும் வழங்கப்பட்டு வருகிறது. மடிக்கணினி மூலம் எளிய, எளிய மற்றும் நடுத்தர மாணவர்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். இதன் மூலம் வேலைவாய்ப்பையும் எளிதில் பெறுகின்றனர்.
ALSO READ : கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை – தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்
தமிழகத்தை போலவே புதுவையிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், புதுவையில் இருக்கும் சுற்றுலா தளங்களை மேலும் மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், புதுவையில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.