வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை..! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

Today News In Tamil Gold prices in Chennai have reached a peak

இந்தியாவில் தங்கத்தின் விலையானது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அடிப்படையில் தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் தங்கம் விலையானது கடந்த மார்ச் மாதம் முதலே ஒரு நாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வந்தது. தங்கம் விலை உயரும் போது 100 முதல் 200 ரூபாய் வரை உயருகிறது. அதுவே குறையும் போது 10 முதல் 50 ரூபாய் வரை மட்டுமே குறைகிறது.

ALSO READ : விடிய விடிய கொட்டிய கனமழையால் சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்..! வாகன ஓட்டிகள் அவதி!!

நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை :

சென்னையில் நேற்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரத்து 385 க்கும் சவரன் ஒன்றுக்கு 51 ஆயிரத்து 080 க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதுவே, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 915 க்கும் சவரன் ஒன்றுக்கு ரூ.47 ஆயிரத்து 320 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரப்படி தங்கம் விலை:

சென்னையில் இன்று 24 கேரட் தங்கம் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் கிராம் ஒன்றுக்கு ரூ.60 அதிகரித்து 6 ஆயிரத்து 445 க்கும் சவரன் ஒன்றுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.51 ஆயிரத்து 560 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.60 அதிகரித்து ரூ. 5 ஆயிரத்து 975 க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.480 அதிகரித்து ரூ. 47 ஆயிரத்து 800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top