நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 15% உயர்வு..! சற்றுமுன் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!!

Today News In Tamil GST collection up 15 Percentage in November says Union Finance Ministry

பொதுவாக நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஜி.எஸ்.டி வரி கட்டுவது வழக்கம். இந்தியாவில் இந்த ஜி.எஸ்.டி. வரி மாதந்தோறும் கணக்கிடப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், தற்பொழுது நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வசூல் கணக்கிடப்பட்டு அதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி. வசூலானது கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் மாதம் ஒன்றிற்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி மட்டுமே வசூலாகி வந்தது.

ALSO READ : இனி ஆவினில் ரூ.10 க்கு பால் விற்பனை..! சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு!!

அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஜி.எஸ்.டி. வசூலானது அதிகரிக்க தொடங்கியது. அதன்படி, 2022-23 ஆம் ஆண்டு நிதியாண்டில் மாதம் ஒன்றுக்கு சராசரி ரூ.1.51 லட்சம் கோடியாக ஜி.எஸ்.டி. வசூல் உயர்ந்து காணப்பட்டது. இதுவரை வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வசூலில் இதுவே உச்சம் என்று கருதப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் மாதம் அதைவிட அதிகமாக ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார்.ரூ1 லட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1.45 லட்சம் மட்டுமே வசூலாகி இருந்த நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதை விட 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 6-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top