தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த கனமழை – இரண்டாக பிளந்த நெடுஞ்சாலை

Today News In Tamil Heavy rain in Thoothukudi highway split in two

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து மற்றும் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மக்கள் பலர் வெள்ள நீரில் சிக்கி தவிக்கின்றனர். மீட்பு குழுக்கள் அனைவரையும் மீட்டு வருகிறது. பல மக்கள் தங்களை மீட்க கோரிக்கையும் விடுத்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்டவை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.

ALSO READ : சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” படம் இன்று ரீ-ரிலீஸ்..! தியேட்டரையே அலறவிட்ட ரசிகர்களின் வீடியோ!!

இதனையடுத்து, திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாகப் பிளந்துள்ளது. கோரம்பள்ளம் குளத்துக்கு வந்த காட்டாற்று வெள்ளத்தால் இந்த நெடுஞ்சாலை இரண்டாக பிளந்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகரம் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top