
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்பொழுது நிலைகொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ய்புள்ளதாக தெரிவித்துள்ளது.
ALSO READ : இந்தியாவில் சில்லறை பணவீக்கம் சரிவு! விலைவாசி உயர வாய்ப்பு – அதிர்ச்சியில் மக்கள்!
மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வலுவடைய இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அடுத்த 3 மணி நேரத்தை பொறுத்தவரையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.