ரெப்போ வட்டி விகிதம் : சற்றுமுன் ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Today News In Tamil Important announcement by RBI Governor regarding repo interest rate for banks

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த ரிசர்வ வங்கியின் மூலமாகத்தான் அனைத்து வங்கிகளுக்கும் கடன் வழங்கப்படுகிறது. வங்கிகளுக்கு வழங்கப்படும் இந்த கடனானது “ரெப்போ வட்டி விகிதம்” மூலமாகத்தான் வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ரெப்போ வட்டி விகிதம் உயரும் போது வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதமும் உயரும். ரிசர்வ் வங்கியானது இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தை நடத்தி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்து வரும்.

அந்த வகையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று(டிசம்பர் 8) நடைபெற்றது. இதில் ரெப்போ வட்டி விகிதம் உள்பட ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ALSO READ : மீண்டும் எகிறிய தங்கம் விலை..! சவரன் ஒன்றுக்கு ரூ.120 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

முன்னதாக ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டியை 6.5 சதவிகிதமாக உயர்த்தியது. அதன்பிறகு வட்டியை உயர்த்துவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி உள்ளது. இதுவரை நான்கு முறை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாமல் நிறுத்தி வைத்துள்ள நிலையில், இத்துடன் ஐந்தாவது முறையாக நிறுத்தி வைத்துள்ளது. ரிசர்வ் வங்கி இந்த முறையும் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யமால் தொடர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top