தமிழகத்தில் பத்திர பதிவு கட்டண உயர்வால் வருவாய் இழப்பு..! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!!

Today news in Tamil Loss of revenue due to increase in bond registration fee in Tamil Nadu

தமிழகத்தில் எந்த இடத்தில் சொத்து வாங்கினாலும் அல்லது சொத்துகளை விற்கும் பட்சத்தில் அதற்கு பத்திரங்கள் எழுதுவது வழக்கம். இந்த பத்திரங்கள் அனைத்தும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும். இதுபோன்ற பத்திரபதிவுக்கான கட்டணம் கடந்த 20 ஆண்டுகளாகவே குறைவான தொகை வசூலிக்கப்பட்டு வந்தது.

ALSO READ : மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியக்குழு அமல்படுத்த வாய்ப்பு..! சற்றுமுன் கிடைத்த சுவாரஸ்ய தகவல்!!

இந்நிலையில், தற்பொழுது தமிழக அரசின் வருவாயை பெருக்கவும் போலி பத்திர பதிவுகளை தடுக்கும் வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரபதிவு கட்டணம் உயர்த்தப்பட்டு கடந்த ஜூலை மாதம் முதல் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டண உயர்வால் தமிழக அரசுக்கு 17,296 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை அமைச்சர் கூறுகையில், பத்திர பதிவுத்துறை மூலம் கிடைக்கும் வருவாயானது அடுத்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டுக்குள் 20,000 கோடி வசூல் பெற்றிருக்க வேண்டும் என்றும் கடந்த 4 மாதங்களாக போதுமான அளவு வருவாய் கிடைக்கததால் வருவாயை அதிகரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்