நெருங்கும் புயல் : நாளை நடைபெற உள்ள அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

Today News In Tamil Nadu Anna University Exams to be held tomorrow postponed due to Cyclone Mijam

வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று மாலை முதலே சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையானது தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருவதால் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ : மக்களே உஷார்! தீவிரமடையும் மிக்ஜம் புயல்… துறைமுகங்களில் 5 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

இந்நிலையில், சென்னையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதனியடுத்து, சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைகழக தேர்வு ஒத்தி வைக்கப்ட்டுள்ளதாகவும். இந்த தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top