நெருங்கி வரும் பொங்கல் பண்டிகை : பரிசு தொகுப்பில் ரூ.2000 வழங்க அரசு ஆலோசனை!

Today News In Tamil Nadu Approaching Pongal festival Government advice to give Rs.2000 in gift package

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தை திருநாளான பொங்கல் பண்டிகை உள்ளது. முன்னதாக பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கரும்பு, மாடு, பொங்கல்தான். ஆனால், தற்பொழுது எல்லாம் பொங்கல் என்றாலே அரசுத் தரும் பொங்கல் பரிசுதான் நினைவிற்கு வருகிறது. ஏனென்றால் தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.

தமிழக அரசு வழங்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த பரிசு தொகுப்பில் அரிசி, பருப்பு, கரும்பு உள்ளிட்ட பல பொருட்களுடன் ரொக்க பணமும் வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் பொங்கல் பரிசு தொகுப்பில் என்ன கொடுக்கலாம் என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

ALSO READ : தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பண்ணன் கூறுகையில், தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் கிடைக்காதது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவும், லோக்சபா தேர்தல் வர இருப்பதாலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top