
தமிழக அரசின் பொத்துறை நிறுவனமாக ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனம் மூலம் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆவின் கிளை நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பால் மட்டுமல்லாமல் பால் வைத்து தயார் செய்யப்படும் நெய், தயிர், பாதாம் பவுடர், பால் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ALSO READ : தமிழக மாநகராட்சியில் உள்ள 2,534 காலிப்பணியிடங்களை TNPSC மூலம் நிரப்ப வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
ஆவின் நிறுவனம் மூலம் விற்கப்படும் பாலானது அவற்றின் கொழுப்பு சத்திற்கு ஏற்றாற்போல் பச்சை, ஆரஞ்சு என பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்பொழுது ஆவின் பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 200மி.லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டின் விலை 10 காசுகள் அதிகரித்து ரூ.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய விலை மாற்றமானது இன்று(வியாழக்கிழமை) முதல் அமல்ப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆவின் முகவர்கள் புதிய விலையின் அடிப்படையில் மட்டுமே வங்கியில் பணம் செலுத்த வேண்டும் என்றும் மண்டல பொறுப்பாளர்கள் புதிய விலையில் பால் பாக்கெட்டுகளை விற்று பணத்தை வசூல் செய்ய வேண்டும் என்றும் ஆவின் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.