ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு..!

Today News In Tamil JEE More time extension to apply for main exam read now

பொதுவாக 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு துறைசார்ந்த படிப்புகளில் உயர்க்கல்வியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் பொறியியல் படிப்புகளில் சிறந்த கல்லூரிகளில் சேர்ந்து பயில விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. பொறியியல் படிப்புகளுக்காக எழுதப்படும் நுழைவுத் தேர்வுக்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இத்தேர்வு இந்தியாவிலும் உலக அளவிலும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஜே.இ.இ. நுழைவுத் தேர்வானத்து மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இதில், ஜே.இ.இ. மெயின் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான ஜே.இ.இ. மெயின் தேர்வு வருகிற ஜனவரி 24 ஆம் தேதி அன்று தொடங்கி பிப்ரவரி 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ : நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 15% உயர்வு..! சற்றுமுன் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!!

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கால அவகாசம் போதுமானதாக இல்லை என்றும் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மாணவர்கள் தேசிய தேர்வுகள் முகமைக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற தேசிய தேர்வு முகமை, ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top